கல்லீரல் உறுப்பு குறித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலக கல்லீரல் தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள பலரும் கல்லீரல் ஆரோக்கியம் குறித்து பேசி வருகின்றனர். உலக கல்லீரல் தினத்தன்று டெல்லியில் கல்லீரல் மற்றும் பித்த அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா உரையாற்றினார்.

நாட்டின் இளைஞர்கள்" தங்கள் ஆரோக்கியத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும், இதனால் அவர்கள் "இன்னும் 40 முதல் 50 ஆண்டுகள் வாழ்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்".

தேவையான அளவு தூக்கம், தண்ணீர் மற்றும் உணவு முறை, மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை எனக்கு நிறைய பலன் கொடுத்துள்ளன. இன்று, நான் எந்த வகையான அலோபதி மருந்தும் எடுத்துக் கொள்வதில்லை.

In ten years the Modi govt has built a holistic healthcare system in the nation. pic.twitter.com/YzpAwrimKI

— Amit Shah (@AmitShah) April 19, 2025

2020 முதல் தனது எடை குறைப்பு குறித்து, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அமித்சா, உடற்பயிற்சி மற்றும் தூக்கத்தை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
"உங்கள் உடலுக்கு இரண்டு மணி நேர உடற்பயிற்சியையும், மூளைக்கு ஆறு மணி நேர தூக்கத்தையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எனது சொந்த அனுபவம்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா கூறினார்.

Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?

Also Read: Toll: இனி ஃபாஸ்ட் டேக் இல்லையா..செயற்கைக்கோள் டோல்தானா! உண்மை என்ன?