நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!

4 months ago 5
ARTICLE AD
<p>சென்னை ஆயிரம் விளக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வருகையால் நாதக வாக்குகள் குறையும் என தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.</p> <p>2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக தனித்துத்தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article