நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!

3 weeks ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென் மண்டல கலாச்சார மையத்தில் (South Zone Cultural Centre - SZCC) வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நண்பாஸ். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் இயங்கி வரும் தென் மண்டல கலாச்சார மையமாகும் (SZCC). இது முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும்.

மொத்த காலியிடங்கள்

இப்பணியிடங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிகள் மற்றும் பிரிவுகள்

நேரடி நியமனம் (Direct Recruitment) மற்றும் அயல்பணி (Deputation) முறைகளின் கீழ் குரூப் A, குரூப் B மற்றும் குரூப் C ஆகிய நிலைகளில் பதவிகள் நிரப்பப்படுகின்றன. இதில் இளநிலை உதவியாளர் (Junior Assistant), உதவியாளர் (Assistant), சுருக்கெழுத்தர் (Stenographer), இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், பொறியாளர் மற்றும் திட்ட இயக்குநர்கள் போன்ற பல்வேறு பணியிடங்கள் அடங்கும்.

கல்வித் தகுதி

சம்பந்தப்பட்ட பதவிகளின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம் (Degree) அல்லது பொறியியல் பட்டம் (B.E/B.Tech) பெற்றிருக்க வேண்டும். (உதாரணமாக, இளநிலை உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சுத் திறன் கோரப்பட்டுள்ளது).

பதவிக்கு ஏற்ப சம்பள விவரங்கள்

பணியின் தன் மற்றும் பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் ₹25,500 முதல் அதிகபட்சமாக ₹67,700 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக அல்லாமல், ஆஃப்லைன் (Offline / தபால் மூலம்) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை 03.11.2026 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

அஞ்சல் முகவரி

இயக்குநர், தென் மண்டலக் கலாச்சார மையம் (SZCC), மருத்துவக் கல்லூரிச் சாலை, தஞ்சாவூர் – 613 004, தமிழ்நாடு. The Director, South Zone Cultural Centre (SZCC), Medical College Road, Thanjavur – 613 004, Tamil Nadu.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article