நகை கடையில் அதிர்ச்சி ! தங்க செயினுக்கு பதிலாக கவரிங் செயின் , 19 சவரன் தங்க செயின் பறிமுதல்

1 month ago 4
ARTICLE AD

நகை கடையில் கவரிங் செயின்

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் மாத வராமு ( வயது 32 ) இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனிஷ்க் நகை கடையில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24 - ம் தேதி , நகைக் கடையில் இருந்த தங்க நகைகளை சரி பார்த்த போது , அதில் தங்க செயின் அடங்கிய பெட்டியில் இரண்டு கவரிங் தங்க செயின் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த புகாரையடுத்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். அதில் நகை கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரான அண்ணனுார் தேவி நகரைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 26 ) மற்றும் அவரது நண்பர் திருவேற்காடு செல்வ கணபதி நகரைச் சேர்ந்த கவுதம் ( வயது 29 ) இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

19 சவரன் நகை திருட்டு

கடையில் வேலை செய்து வந்த லோகேஷ் கொடுத்த திட்டத்தின் படி , அவரது நண்பர் கவுதம் நகை கடைக்கு வாடிக்கையாளர் போல் சென்றுள்ளார். பின் மற்ற ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கவரிங் நகையை வைத்து விட்டு 19 சவரன் மதிப்பிலான இரு தங்க செயினை திருடிச் சென்றது விசாரணையில் தெரிந்தது. லோகேஷ் , கவுதம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 19 சவரன் செயின்களை பறிமுதல் செய்தனர்.

அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணியிடம், 18.5 சவரன் தங்க நகை திருட்டு

தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் அரசு மருத்துவர். இவரது மனைவி பிரியா ( வயது 30 ) ஆறு மாத கர்ப்பிணி. இவர், வேலுாரில் உள்ள தனது உறவினர் திருமண விழாவில் பங்கேற்க தன் ஒன்பது வயது மகளுடன், தாம்பரத்தில் இருந்து வேலுார் செல்லும் அரசு பேருந்து தடம் எண் - 155 ல் ஏறி பயணித்தார்.

திருமண விழாவில் அணிந்து கொள்ள, 18.5 சவரன் தங்க நகைகளை பையில் எடுத்து சென்றுள்ளார். தாம்பரத்தில் இருந்து படப்பை சென்ற போது பேருந்தில் பயணித்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சில்லரை நாணயங்களை பிரியா மீது தவறவிட்டுள்ளார்.

சாமி உண்டியலில் போட வேண்டும் எனக் கூறி, கீழே விழுந்த சில்லரை நாணயங்களை எடுத்து தருமாறு அந்த நபர் பிரியாவிடம் கூறியுள்ளார். அதனால், சில்லரை நாணயங்களை சேகரித்து அந்த நபரிடம் பிரியா கொடுத்துள்ளார்.

அதன் பின் , அந்த நபர் படப்பை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். ஒரகடம் பகுதியை பேருந்து கடந்த போது, தனது பை திறந்த நிலையில் இருப்பதையும் , அதில் இருந்த தங்க நகை மாயமானதையும் கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார்.

இதையெடுத்து , பேருந்தில் இருந்து இறங்கி வந்து , படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article