தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?

4 months ago 9
ARTICLE AD

கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவர் நீட் மறுதேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிகா. அவருக்கு வயது 20. 2024ஆம் ஆண்டு சேலம் அரசு கோட்டை மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அவர், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

நீட் தேர்வு ரத்து

மே 3ஆம் தேதி நடந்த தேர்வை எழுதி இருந்தார். எனினும் நீட் தேர்வில் வினாத்தாள் மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து வரும் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வு அச்சம் காரணமாக கோபிகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துக் கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article