தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து

6 days ago 3
ARTICLE AD
<p>தைவானை கடந்து சென்ற சாம்பி புயலின் தாக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீர்குலைந்துள்ள நிலையில், மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். தைவானை சில நாட்களாக புரட்டி எடுத்த இப்புயல், நள்ளிரவில் இலான் கடற்கரையை நோக்கி நகர்ந்தபோது சுமார் 227 கி.மீ வேகத்தில் காற்றுவீசிய நிலையில், மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் தாக்கத்தால் சுமார் 3 லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதோடு ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் கடும் சேதத்திற்கு ஆளாகின.</p> <h2><strong>ஒருவர் பலி: 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்</strong></h2> <p>சூறைக்காற்று மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாடு என மொத்தமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.&nbsp;</p>
Read Entire Article