தேர்தல் வாக்குறுதிகள்; ஆதாரங்களுடன் விவாதம் நடத்தத் தயாரா? - அன்புமணி சவால்

3 months ago 4
ARTICLE AD

முதல்வர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லக்கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களுடன் விவாதம் நடத்தத் தயாரா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில்  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அந்த வகையில், மொத்தம்  404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று மீண்டும் ஒரு பொய்யை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மீண்டும், மீண்டும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற திமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

தேர்தலில் அளிக்கப்பட்டவற்றில்  98% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பெரும் பொய் கூறி வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக ஆட்சியில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது 13% வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பாட்டாளி மக்கள் கட்சி பட்டியலிட்டு ’’விடியல் எங்கே?” என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிட்ட பிறகு  98 விழுக்காட்டில்  இருந்து இறங்கி வந்து  364  வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு வருவதாக  சற்று குறைவான பொய்யைக் கூறி வருகிறார்.

364 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன என்றெல்லாம் பொய்ப்பாட்டு பாடும்  திமுக அரசால், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை. அவ்வாறு வெளியிட்டால் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவை என்ற உண்மை அம்பலமாகிவிடும் ;  திமுக அரசைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள் என்ற அச்சத்தால் தான்  வெறும் எண்ணிக்கையை மட்டும் கூறி மக்களை  ஏமாற்ற திமுக அரசு முயலுகிறது.

நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை... அதை  நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.  அவருக்கு மனசாட்சியும் இல்லை; மனித நேயமும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு தான்;  அதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என தந்தையும், மகனும் ஊர் ஊராக சென்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றினீர்களே... அப்போது தெரியவில்லையா இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று?

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பற்றி எரியும் பிரச்சினையாக இருந்தது நீட்விலக்கு தான். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த வாரமே நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்து விட்டு, இப்போது நிறைவேற்ற முடியவில்லை என்று கூறுவது மாபெரும் நம்பிக்கைத் துரோகம்.  2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட  50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆன்மாக்கள்  இந்த ஏமாற்றுவாதிகளை மன்னிக்காது.

தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் பொய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் பொய் என அனைத்திலும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை திராவிட மாடல்  என்று கூறுவதை விட கோயபல்ஸ் மாடல் அரசு என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.

நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் அறைகூவல்....

திமுக அரசு நிறைவேற்றாத 373 வாக்குறுதிகள், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், முழுமையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள் ஆகியவற்றின் பட்டியலை ஆவணமாகவே வெளியிட்டிருக்கிறேன். உண்மையாகவே திமுக அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அவற்றின் பட்டியலையும், அவற்றால் பயனடைந்த மக்களின் விவரங்களையும்  வெளியிடுங்கள். அதனடிப்படையில் மக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்துவோம்.  திமுக அரசின் பொய்களை அம்பலப்படுத்த நான் தயார், நீங்கள் சொன்னவை உண்மை என்பதை நிரூபிக்க நீங்கள் தயாரா? என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article