தேர்தல் செலவு கணக்கீடு: சந்தை விலையை விட பல மடங்கு அதிகம்.. கொந்தளித்த செல்லூர் ராஜு !

2 weeks ago 3
ARTICLE AD

தேர்தல் செலவினக் கணக்கீட்டிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் சந்தை விலையை விட மிக அதிகமாக உள்ளது: மதுரையில் செல்லூர் கே.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு.

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த பின்னர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, தேர்தல் நடைமுறைகளில் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தல் செலவினக் கணக்கீட்டிற்காக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணங்கள் எதார்த்தத்திற்குப் புறம்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சந்தையில் 10 ரூபாய்க்கு வாடகைக்குக் கிடைக்கும் ஒரு பிளாஸ்டிக் நாற்காலிக்கு, தேர்தல் ஆணையம் 50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. 25 ரூபாய் மதிப்புள்ள காகிதக் கொடிகளுக்கு 51 ரூபாய் என்றும், சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள துணிக் கொடிகளுக்கு 258 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டபக் கூட்டங்களுக்கு 60,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் மதுரை மாநகராட்சி விதிகளின்படி இது மிக அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார். காலை சிற்றுண்டிக்கு ஒரு நபருக்கு 93 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் மற்றும் பாதுகாப்புப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக தான் போட்டியிடும் மேற்கு தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், இரட்டைப் பதிவுகள் அப்படியே இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்குச்சாவடிகள் அமையாமல், சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார். படிக்காத மற்றும் விவரம் தெரியாத நபர்களைப் பாரபட்சமின்றி BLO ஆக நியமித்துள்ளதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

மதுரை மண் நீதி கேட்ட மண், இங்கு மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது

சில காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்களுக்காக அனுமதி கோரிச் செல்லும் எதிர்க்கட்சியினரை அதிகாரிகள் கண்ணியக்குறைவாக நடத்துவதாகவும், ஆடு மாடுகளை விரட்டுவது போல நடந்து கொள்வதாகவும் அவர் சாடினார். மதுரை மண் நீதி கேட்ட மண், இங்கு மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆளுங்கட்சியினர் என்னதான் முயற்சி செய்தாலும், மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்று அவர் தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்தார்.

Read Entire Article