தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 156 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு குறு அங்கன்வாடி ஊழியர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 186 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிங்க: Ooty Plans: மொத்தமாக மாறப்போகும் நீலகிரி - ஊட்டிக்கான 6 முத்தான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் - என்னென்ன தெரியுமா?

மாவட்டத்தில் வட்டாரம் திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி ஊழியர், குரு அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனச்சுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். இதற்கான விண்ணப்பங்களை. www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அங்கன்வாடி ஊழியர் ரூபாய் 7700 என்ற தொகுப்பூதியத்திலும், குரு அங்கன்வாடி ஊழியர் ரூபாய் 5700 என்ற தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர் ரூபாய் 4500 என்ற தொகுப்பூதியத்திலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்த பிறகு அவர்கள் சிறப்பு காலம் முறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் .

இதையும் படிங்க: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!

அங்கன்வாடி ஊழியர் மற்றும் குரு அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலிப் பணியிடம் நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவும், அதே கிராம ஊராட்சி எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

இதையும் படிங்க: BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?

மேலும் விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சியில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டு பகுதியைச் சேர்ந்தவராகவோ மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து நாளை திங்கட்கிழமை முதல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 23ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.