தெலங்கானாவில் பயணியின் பையில் இருந்து நைசாக நகை திருடிய ட்ரைவர் - சிசிடிவி காட்சி

1 year ago 7
ARTICLE AD
தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியின் பையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகையை திருடியபோது பிடிபட்டுள்ளார். வாரங்கல் நகரிலிருந்து நிஜாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் தனது பையை வைத்திருந்திருந்தார். அதன் உள்ளே தங்க நகையுடன் சிறிய டப்பாவும் வைத்துள்ளார். இதை கவனித்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அந்த பையை திறந்த, தங்க நகை இருந்த டப்பாவை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார். இதனை ஏதேச்சையாக பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த திருட்டு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
Read Entire Article