‘தென் மாவட்ட மக்களே’ அபுதாபிக்கு இனி மதுரையில் இருந்து பறக்கலாம் - புதிய விமான சேவை!

7 months ago 5
ARTICLE AD

மதுரையிலிருந்து  அபுதாபிக்கும் செல்வதற்கான தற்போதைய முன்பதிவு கட்டணமாக ரூ.13177 என இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை விமானநிலையம்

மதுரை அவனியாபுரம் அருகே மதுரை விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமானநிலையம் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேர சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய், சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் மற்றும் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை உட்பட உள்நாட்டு விமானங்களும் வந்து செல்கின்றன.

அபுதாபிக்கு விமான சேவையை தொடங்குவதாக அறிவிப்பு

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக இண்டிகோ நிறுவனம் வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் அபுதாபிக்கு விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி இந்திய நேரப்படி காலை 7:20 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 01 : 05 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். இதேபோல் மதுரையில் இருந்து பிற்பகல் 2. 35 மணிக்கு புறப்பட்டு மாலை 5:20 மணிக்கு அபுதாபி சென்றடையும். இந்த விமான சேவை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் தொடங்கியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 13ஆம் தேதி அபுதாபியிலிருந்து  மதுரைக்கும், மதுரையிலிருந்து  அபுதாபிக்கும் செல்வதற்கான தற்போதைய முன்பதிவு கட்டணமாக ரூ.13177 என இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Read Entire Article