தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் இதோ !

6 months ago 6
ARTICLE AD

வார இறுதி நாள் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு புதன்கிழமை துவங்குகிறது.

சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

வார இறுதி நாள் கூட்ட நெரிசலை  சமாளிக்க சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06089) ஜூன் 21 அன்று சென்னையில் இருந்து இரவு 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் எங்கு நின்று செல்லும்

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06090) ஜூன் 22 அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பயண சீட்டு முன்பதிவு புதன்கிழமை (துவங்குகிறது.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள்,  17 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜூன் 18) காலை 8 மணிக்கு துவங்குகிறது.” என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article