“தென் மாநிலங்களுக்கு அநீதி” – தொகுதி மறுவரை சட்டத்தை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி கண்டனம்

1 day ago 1
ARTICLE AD

ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுவரைச் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்தது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்பாட்டம் போராட்டம் நகல் இருப்பு போராட்டம் என  நடைபெற்றது. இன்று திண்டுக்கல் திமுக கலைஞர் மாளிகை முன்பு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் தொகுதி மறு வரை சட்ட நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கருப்பு சட்டை அணிந்து வந்தார். அதேபோல் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் கருப்புக்கொடி ஏந்தி இருந்தனர்.

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி, தொகுதி மறுவரை என்பது பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  அவசரகதியாக பாராளுமன்றத்தை கூட்டி கொண்டு வருவது ஏன்? அவதி அவதியாக கொண்டு வருவதும் மறைமுகமாக தென்மாநிலங்கள் அநீதி இழைக்கப்படுகிறது. நமது பிரதிநிபத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படுகிறது. வடமாநிலங்களை வைத்துக் கொண்டு பிரதிநிவர்த்தி அதிகப்படுத்தி அவர்களுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வரலாம் என முயற்சி செய்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சுக்கு நூறாக உடைக்கும் வகையில் நமக்கு உண்டான பிரதிநிவத்தை  குறைக்கும் வகையில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்ற வகையில் உள்ளது. சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் நாடு எந்த அளவுக்கு போராட்டத்தை சந்திக்க கூடும்.

வடமாநிலங்களாக இருந்தாலும் தென் மாநிலங்களாக இருந்தாலும் பாதிக்கக்கூடிய சட்டத்தை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாட்டையே துண்டாட கூடிய வகையில் ஒன்றிய அரசின் செயல் உள்ளது. எதிர்க்கட்சிகளின் குறவழையை நெரிக்கிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பிரதிநிவத்தை குறைக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி முதலில் அவர் வெற்றி பெறுவாரா என பார்ப்போம். பாரதிய ஜனதா கூட்டணிக்கு சென்றவர்  பாரதிய ஜனதா கட்சியிடம் ஐக்கியமாகிவிட்டார். இன்னும் சில நாட்களில் அக்கட்சியிலேயே இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர். இந்தநிலையில் யாரையும் அழைக்காமல் அவசர சட்டம் என்பது நியாயம் இல்லை. அதிமுகவிற்கு எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாததால் அவர்கள் என்ன முடிவு வேண்டாலும் எடுப்பார்கள் பாரதிய ஜனதா கட்சியோடு ஐக்கியமாகி விட்டார். அனைத்துக் கட்சியினரையும் அழைத்து பேசி ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய அரசு யாருக்கும் வாய்ப்பே கொடுக்கவில்லை எனக்கூறினார்.

Read Entire Article