தூத்துக்குடி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! 22 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்!

2 months ago 4
ARTICLE AD

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்துறை பணியாளர், ரேடியோகிராப்பர், நர்சிங் உதவியாளர், ஒடி டெக்னீஷியன் உள்ளிட்ட பதவிகளில் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரம்
பதவியின் பெயர்  காலிப்பணியிடங்கள்,பல்துறை பணியாளர் - 7, ரேடியோகிராப்பர் -  4, நர்சிங் உதவியாளர்  - 7, ஒடி டெக்னீஷியன்  - 4, மொத்தம்  - 22

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்கள் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு பொறுத்தவரை, பல்துறை பணியாளர் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம். ரேடியோகிராப்பர், நர்சிங் உதவியாளர், ஒடி டெக்னீஷியன் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்டி, எஸ்சி பிரிவினர் 37 வயது வரையும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 34 வயது வரையும், பொதுப்பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி : பல்துறை பணியாளர் பதவிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ரேடியோகிராப்பர் பதவிக்கு ரேடியோ டயாலிசிஸ் டெக்னாலஜி 2 வருட டிப்ளமோ, ரேடியோலாலஜி உதவியில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.நர்சிங் உதவியாளர் பதவிக்கு அதற்கான சான்றிதழ் படிப்பை பெற்றிருக்க வேண்டும். ஒடி டெக்னீஷியன் பதவிக்கு அதற்கான சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்
இப்பணியிடங்கள் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், மாதத் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கப்படும். ரேடியோகிராப்பர் பதவிக்கு மட்டும் ரூ.8,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது. தேர்வு செய்யப்படுவர்கள் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானதாகும். பணி நிரந்தரம் செய்யப்படாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாதம் பணி நியமனத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை: தூத்துக்குடியைச் சேர்ந்த இப்பதவிகளுக்கான கல்வித்தகுதியை பெற்றவர் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் இப்பதவிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் பெற்றுகொள்ளலாம். பதவிகளுக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனை நேரிலோ அலல்து தபால் மூலமாகவோ சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

வேண்டிய ஆவணங்கள் : கல்வித்தகுதி சான்றிதழ்கள், முகவரிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு அல்லது இருப்பிட சான்று, முன் அனுபவ சான்று, முன்னுரிமை இருப்பினும் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்  02.10.2025. நேர்காணல்  பின்னர் அறிவிக்கப்படும். பணி தொடக்கம்  பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குநர் நலப்பணிகள்,
166, வடக்கு கடற்கரை சாலை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம்,
மீன்வளத்துறை வளாகம்,
தூத்துக்குடி - 628 001. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Read Entire Article