வீட்டில் வீணாக போடும் பொருட்களில் கலைச் சிலைகளை உருவாக்கும் இளைஞர், சித்திரைத் திருவிழாவை கண்முன் கொண்டுவந்துள்ளார்.

தூக்கிப் போடும் பொருட்களில் சாமி சிலைகள்

"பட்டன், நூல், கம்புக் குச்சி, மெழுகுவர்த்தி, சோப், கலர் பேப்பர், நியூஸ் பேப்பர் என்று எது கிடைத்தாலும் அதனை கலை பொருட்களாக மாற்றி வருகிறார் இந்த இளைஞர். கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன் என்ற சொல்லுக்கு ஏற்ப, தான் கண்ட பொருட்களை எல்லாம் கலை நயமிக்க பொருட்களாக மாற்றி அசத்தி வருகிறார். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார். வீட்டு உபயோகத்திற்குப் பிறகு தேவையில்லை என தூக்கிப் போடும் பொருட்கள் மூலம் அழகு சிலைகள் மற்றும் சுவாமி சிலைகளை வடித்து அசத்தி வருகிறார்.

நேரம் கொடுத்த கொரோனா காலம்

சிறுவயத்து முதலே கார்டுன் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டவர் கணேஷ்குமார். கார்டூன் சக நண்பர்களுக்கும் பிடிக்கும் என்பதால் கேட்டும் கதாபாத்திரங்களை அச்சு அசலாக வரைய தொடங்கியுள்ளார். தொடர்ந்து அவரது டிப்ளமோ படிப்பிலும் பல்வேறி பிராஜெக்ட்டும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா காலகட்டம் நிறைய நேரத்தை கொடுத்துள்ளது. அந்த சமயத்தில் ஓவியங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அழகுக் கலை பொருட்களாக மாற்றியுள்ளார். தொடர்ந்து திறமையை மேம்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வை நினைவுகூரும் வகையில், தெர்மாகோல், சோப்பு களிமண் போன்ற பொருட்களை வைத்து சிறந்த சிலை ஒன்றை வடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், பூப்பல்லாக்கு விழாக்கள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து பழைய நுால்கள், துணிகள், சோப்புகள் கொண்டு கலைச்சிற்பமாக மாற்றியுள்ளார். மேலும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் யாகசாலைகளுக்கான அலங்கார ஓவியங்கள், பூந்தட்டு வடிவமைப்புகளையும் செய்துள்ளார். இவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீட்டில் உள்ள பொருளில் சித்திரைத் திருவிழா

இது குறித்து கணேஷ்குமார் நம்மிடம் பேசுகையில்..,” ஒரு சிரிய வாட்டர் கேனில் கூட நாம் கலை பொருட்கள் செய்ய முடியும். அதிக பணம் கொடுத்து பல்வேறு பொருட்களை வாங்கி, அதில் இருந்து கலை பொருட்களை செய்வதை விட, நாம் தூக்கிப் போடும் பொருட்களை வைத்து அழகுக் கலை செய்யும் போது வரவேற்பு அதிகமாக இருக்கும். எனக்கு ஆன்மீகமும் பிடிக்கும் என்பதால் மயிலில் முருகன் அமர்ந்திப்பது போல் ஒரு சிலை செய்தேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. என்னை பலரும் பாராட்டினர். அது எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்தது. இந்தநிலையில் தான் தற்போது சித்திரைத் திருவிழா தீம் செய்துள்ளேன். மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம் முதல் அழகர்மலைக்கு கள்ளழகர் செல்லும் வரை மதுரையே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும். அதை வெளிப்படுத்தும் விதமாக தற்போது அதனை செய்து முடித்தேன். தொடர்ந்து இதே ஆதரவை வைத்து மதுரையின் பழமையான இடங்களை போல் பொருட்கள் செய்வேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.