தூக்கத்திலேயே உயிரை விட்ட டெல்லி கணேஷ்..இறுதி அஞ்சலி செலுத்தும் திரைப்பிரபலங்கள்

1 year ago 7
ARTICLE AD
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல நலக்குறைவு காரணமாக மறைந்தார். சென்னை ராமபுரம் பகுதியில் இருக்கும் டெல்லி கணேஷின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் டெல்லி கணேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று (சனிக்கிழமை) இரவு குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசி சிரித்துவிட்டு தூங்க சென்ற டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக, அவரது மருமகன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். டெல்லி கணேஷ் இறுதி சடங்குகள் நாளை காலை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article