ஒரு லட்சம் பிரதிகள் விற்ற வேள்பாரி

எழுத்தாளரும் மார்க்சிஸ்ட் கட்சி எம்பியுமான சு வேங்கடேசன் எழுதி விகரன் பிரசுரித்த நாவல் வேள்பாரி. கீழடி நாகரிகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஒரு பெரும் நிகழ்வாக சென்னை கலைவானர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

என்ன எதுக்கு கூப்டீங்க - கலகலப்பாக பேசிய ரஜினி

" பொதுவாகவே திருமணங்கள் சீசன் வந்தால் என்னிடம் நிறைய பேர் பத்திரிகை கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என்பார்கள். நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன் என்றாலும் இரண்டு நிமிடத்திற்கு வந்து போகும்படி வற்புறுத்துவார்கள். ஆனால் சு வெங்கடேசன் இந்த நிகழ்விற்கு நான் வரவேண்டும் என்று வற்புறுத்தாமல் மிக இயல்பாக கேட்டார். ஆனால் ஒரு புத்தக நிகழ்விற்கு என்னை அழைக்கிறார்கள் . பல புத்தகங்களை படித்த சிவகுமார் இருக்கிறார் . கமல் இருக்கிறார் . இவர்களை எல்லாம்விட்டு என்னை ஏன் அழைக்கிறார்கள். போன முறை அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசியபோது சீனியர்கள் பற்றி நான் சொன்ன கருத்துடன் இன்னொரு கருத்தையும் சொல்ல நினைத்திருந்தேன். அனுபவம் இல்லாதவர்கள் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் இருக்க முடியாது அனுபவம் தான் ஒரு இயக்கத்தில் தூன்கள் என்று சொன்ன நினைத்தேன் ஆனால் எல்லாரும் சிரித்ததால் அதை மறந்துவிட்டேன். அதனால் இந்த நிகழ்வில் எதையும் பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது என்று யோசித்து தான் வந்தேன். புத்தகங்கள் நமக்கு நாம் பார்க்காத உலகத்தை காட்டுகின்றன. நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. வாசிப்பு என்பது ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். " என ரஜினி பேசினார்

கூலி

ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கூலி படத்தின் முதல் பாடல் சிகிட்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாடல் மோனிகா வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே இந்த பாடலில் கேமியோ செய்துள்ளார்.