துபாய் விமான நிலையம் அருகே இன்று காலை மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், அதனால் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவசரமாக சென்னை திரும்பியதாகவும் தகவல். பயணிகள் அனைவரையும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைத்த ஏற்பாடு. துபாயில் நிலைமை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும், துபாய் புறப்பட்டு செல்லும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு, 242 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதன்பின்பு அந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சுமார் 200 பயணிகளுடன், துபாய்க்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.

இந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் குஜராத் கடல் எல்லையில் சென்று கொண்டிருந்த போது, துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வழி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், விமானிக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சென்னைக்கு செல்ல உத்தரவு

இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானி, துபாய் மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளோடு அவசரமாக தொடர்பு கொண்டார். அப்போது அந்த விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு சென்று தர இயிறக்கும் படியும், மறு உத்தரவு வரும் வரையில் சென்னையில் இருந்து புறப்பட்டு வர வேண்டாம் என்றும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 8.20 மணி அளவில், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கி உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தற்போது விமானத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். விமானம் புறப்படுவதற்கு கால தாமதம் ஆனால், பயணிகள் அனைவரும் 4o இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.