தஞ்சாவூர்: துபாயில் வேலை தேடும் தமிழ்நாட்டைசேர்ந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இந்த வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் சரி, தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் சரி இதற்கு விண்ணப்பிக்கலாம். என்ன வேலை என்று பார்ப்போம் வாங்க.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்) உள்ள எலெக்ட்ரிஷியன், பிளம்ர், மான்சன், ஃபிட்டர், பெயிண்டர் மற்றும் லேபர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, துபாய் வேலைவாய்ப்பிற்கு ஆட்களை தேர்வு செய்ய திருச்சியில் நேர்காணல் நாளை 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்கான ஆலோசனைகள், விசா மற்றும் இதர சேவைகளும் இந்த நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக https://omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படவும் செய்யப்படும். இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நிறுவனம் மூலமே பணி வாய்ப்பை பெற வழிவகை செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு (துபாய்) அமீரகத்தில் எலெக்ட்ரிஷியன், பிளம்பர், மான்சன், ஃபிட்டர், பெயிண்டர், லேபர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியோ அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 வருடம் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். துபாய் பணிக்கு 22 முதல் 45 வயதிற்குள் இருக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிஷியன், பிளம்பர், மான்சன், பிட்டர் ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.47,250 சம்பளமாக வழங்கப்படுகிறது. பெயிண்டர் பதவிக்கு ரூ.44,100 மற்றும் லேபர் பணிக்கு ரூ.29,900 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகி, பணியில் சேரும் நபர்களின் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்
[email protected] என்ற மின்னஞ்சலுக்கு சுய விவரம் அடங்கிய விண்ணப்பப் படிவம், கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் காப்பி சேர்த்து அனுப்ப வேண்டும். இன்று 7-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் திருச்சியில் நாளை நவம்பர் 8.11.25ம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். நேர்காணல் கீழகண்ட முகவரியில் நடக்கிறது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூர் : 620014. திருச்சி மாவட்டம். இப்பணிக்கு குறித்த கூடுதல் விவரங்களை https://omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் 044-22502267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். மேலும், 9566239685 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம். அருமையான இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.