தீயாய் காதலிக்கும் 'மேஷ ராசி'

3 months ago 7
ARTICLE AD

தீயாய் காதலிக்கும் 'மேஷ ராசி' - உங்களது காதல் எப்படிப்பட்டது?

அன்பார்ந்த Abp நாடு வாசகர்களே காதல் சீரிஸ்-சில்... மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு காதல் எப்படிப்பட்டது நீங்கள் என்ன ரசனை உடையவர்கள் என்பதை பார்ப்போம்...

மேஷ ராசி கம்பீரமான தோற்றம் நேர்கொண்ட பார்வை பேச்சில் துணிவு எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் தன்மை இப்படி உங்களுடைய ஆளுமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.... அதேபோல உங்களுடைய காதல் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்?

மேஷ ராசிக்கு ஐந்தாம் இடம் சூரியன் அனைவருக்கும் ஒளி கொடுப்பவர் மறைந்து மறைந்த காதலித்தாலும் கூட உங்கள் காதல் சுலபமாக வெளிப்பட்டு விடும் காதலிப்பவரை சுற்றி நீங்களாகவே இருப்பீர்கள்... பெரிதாக நீங்கள் அவர்களிடத்தில் காதல் செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றாலும் எதிர் தரப்பை நீங்கள் அவர்களை விட ஆயிரம் மடங்கு அதிகமாக நேசிக்கத்தான் செய்வீர்கள்.... உங்களை காதலிப்பவர் அதிர்ஷ்டசாலிகள் காதலோடு நில்லாமல் அதை திருமணம் வரை கொண்டு சென்று வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை காதலித்த நபரோடு பயணிக்கும் ஒரு மாபெரும் உன்னத ராசி உங்கள் மேஷ ராசி...

காதல் கவிதை அரைகுறையாக தான் எழுதத் தெரியும் ஆனால் காதலிப்பவர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்ள தெரியும் உங்களுக்கு... மற்ற கிரகங்கள் எப்படி சூரியனை சுற்றி வருகிறது  காதலிப்பவரையும் நீங்கள் சுற்றி வருவீர்கள்... அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் செய்து கொடுப்பீர்கள் வீட்டிலிருந்து உங்களது காதலனோ காதலியோ விரும்பினால் கூட அந்த உணர்வை எங்கிருந்தே உணரக்கூடிய காதல் யோகிகள்...

காதல் தீ மல மல பரவுவது போல நீங்கள் காதலிக்கும் நபருக்கு உங்களுடைய காதல் பேசாமலேயே புரியும்.... சட்டென்று கோபப்பட்டாலும் பத்து நிமிடத்தில் சமாதானமாக கூடிய சக்தி உங்களுடைய காதலுக்கு உண்டு.... வாழ்நாளில் நீங்கள் யாரை காதலிக்கிறீர்களோ அவரை உயிர் போகும் வரை நெஞ்சிலே சுமக்கும் பாக்கியசாலிகள்.... மேஷ ராசியின் காதலைப் பொறுத்தவரை தெய்வீக காதல் கோவில் புனித ஸ்தலம் போன்ற பகுதிகளில் உங்களது காதல் உலா வரும் ஊராருக்கு சுலபமாக தெரிந்து விடும் நெறிபெறிவது எங்கே என்று தெரியாதா என்ன அது போல நீங்கள் காதலிக்கும் நபர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.... வீட்டிலே சொல்லும் பொழுது சற்று நீங்கள் காதலிப்பவரை வீட்டிற்குள் சேர்க்க பயப்படுவார்கள் ஆனால் அவர்களோடு பழகி பார்த்தால் தான் தெரியும் அவர்கள் அவ்வளவு அன்பானவர்கள் என்று...

காதலில் நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம் :

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் ஆகையால் காதலிப்பவர் ஏதேனும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினால் கவலை வேண்டாம் அவர்களுக்கு அமைதியாக எடுத்து புரிய வையுங்கள் கோபப்படாதீர்கள் மனதில் பட்டதை சாந்தமாக கூறுங்கள் எடுத்தறிந்து பேச வேண்டாம் ...

காதலை காதலிப்பவரை வாழ்க்கையின் இறுதி வரை கொண்டு செல்லும் மேஷ ராசி அன்பர்களே காதல் என்பது ஆண் பெண் திருமணத்திற்கு முன்பாக வருவது என்பதை எடுத்துக் கொள்ளக் கூடாது மொத்தமாக திருமணத்திற்கு பிறகும் கணவன் மனைவி இருவரும் நேசிப்பதையும் காதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் பொதுவாக காதல் ஒரு விரும்பும் நபர் மீதுதான் வரும் அவர் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம் அதற்கான அளவுகோல் நாம் யாரை நேசிக்கிறோம் என்பதை பொறுத்துதான் அமையும்...

Read Entire Article