இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.

இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பயணிகள் வருகை பெருமளவில் அதிகரிப்பது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், பயணத்தை மேலும் எளிதாக்கவும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்த நிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தீபாவளி திருநாள் குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டுக்கான தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 8-ம் நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வரவுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இரவு 11.55 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் செல்கிறது.மறுமார்க்கத்தில் 9ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவை போத்தனூரில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் மறுநாள் காலை 9.35 மணி அளவில் சென்னை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.இதேபோல், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது.மறுமார்க்கத்தில் இதே வழித்தடத்தில் நவம்பர் 9ம் தேதி இரவு 9 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.