திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஏழூர் சப்தஸ்தான விழா

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஏழூர் சப்தஸ்தான விழா வெகு விமரிசையாக நடந்தது. திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்த்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களுக்கு புறப்பட்டு சென்றார்.

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா 13 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 1ம் தேதி வேதங்கள், மேளதாளங்கள், நாதஸ்வர கச்சேரிகள் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றுடன் விழா தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஐயாறப்பர், அம்பாள்  ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். முக்கிய நிகழ்வான ஐந்தாம் திருநாள் சுவாமி தன்னைத்தானே பூசித்தல் காதோலை சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏழாம் திருநாளில் பெருமாளுக்கு சங்கு சக்கரம் வழங்கும் அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஒன்பதாவது நாளான திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது இதில் ஐயாறப்பர் அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர், அறம்வளர்த்தநாயகி என பஞ்ச மூர்த்திகளும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறைவனை வழிபட்டு சென்றனர்.

முக்கிய நிகழ்வான இன்று ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களுக்கு ஐயாறப்பர் அம்பாள் கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை திருமண கோலத்தில் வெட்டிவேர் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அலங்கார தீபாராதனைஇ பஞ்சமுக தீபாரதனை கோபுர தரிசனம் என பல நிகழ்வுகள் வேதங்கள் முழங்க மேளதாள இன்னிசை கச்சேரியுடன் ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்களின் மத்தியிலேயே புறப்பட்டு சென்றார்.

சப்தஸ்தான முதல் தலமான திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பந்துருத்தி,திருநெய்தானம் வந்தடைந்தது. தொடர்ந்து திருவையாறு தேரடி திடலில் ஏழூர் கண்ணாடி பல்லக்குகளும் ஒரே இடத்தில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் சொக்கலிங்கம் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Read Entire Article