திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி

2 weeks ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: திருவையாறு அருகே கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு  பூ கொண்டு சென்றபோது, லோடு ஆட்டோ வாகனத்தில் ஓடிக் கொண்டிருந்த ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி படுகாயமடைந்த 5-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி மகள் ரக்க்ஷிதா (10). கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கண்டியூர்  அருகே வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழாவுக்காக (டாட்டா ஏசி) சுமை ஆட்டோ வாகனத்தில் செங்கமேடு அருகே சென்ற போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர் இன்ஜின் அருகே மாணவி ரக்க்ஷிதா அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலை முடி இன்ஜினின் சிக்கியதில்  தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை  திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீஸில் ரக்க்ஷிதாவின் தந்தை ராஜீவ் காந்தி புகார் செய்தார். புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணத்தில் குட்கா பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு தொடர்ந்து புகார் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கும்பகோணம் உட்கோட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தாராசுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதீஸ் காவலர் நிஷார் ஆகியோர் தாராசுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாராசுரம் கீழவீதி எழுமிச்சங்காபாளையம் பகுதியில் சோதனை செய்த போது அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முகமது யூசுப் (55) என்பவர் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஏராளமான மூட்டைகளில் வைத்திருந்த  பல லட்சம் மதிப்புடைய சுமார் 880 கிலோ குட்கா பொருட்களையும், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், ஸகூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (40). தொழிலாளியான இவர் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி 13 வயதுடைய மனநலன் குன்றிய சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து ரவிச்சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 8 லட்சம் பெற்றுத் தருமாறும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு 50 வேலை நாள்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞர் சசிரேகா, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். சோமசுந்தரம், தலைமைக் காவலர் புகழேஸ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாராட்டினார்.

Read Entire Article