திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பித்தனர். சிவ வாத்தியங்கள் முழங்க, பாராயணம் பாடியபடி தேர் கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வந்தது. விழாவின் நிறைவாக, சிவன், அம்மன் ஆகவும், அம்மன், சிவன் ஆகவும் வேடமிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும், 'பஞ்சப் பிரகாரம்' மார்ச் 14ஆம் தேதி நடைபெறுகிறது.