திருமாவளவன் கார் விபத்து.. விசிக போராட்டம், பாதுகாப்பு கோரிக்கை - மதுரையில் நடந்தது என்ன?

2 months ago 6
ARTICLE AD

திருமாவளவன் கார் மீது பைக் மோதிய விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக்கோரி விசிக கட்சியினர் ம்துரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் நடந்த விபத்து

உச்சநீதிமன்ற நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று சென்னை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான திருமாவளவன் காரில் புறப்பட்டு சென்ற போது அங்கு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பைக் ஓட்டி வந்தவரை விசிகவினர், வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிகவினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பைக் ஓட்டிவந்த நபர் விசிக தலைவர் வாகனம் வருவதை பார்த்து சாலையில் வேண்டுமென்றே நின்று பிரச்னையில் ஈடுபட முயற்சித்தார் எனக் கூறி அதன் ஆதாரத்தை விசிகவினர் வெளியிட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டம்

இந்நிலையில் மதுரை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், பைக் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு திருமாவளவனுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், கார் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை கோரியும் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டம் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல் வழியாக செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Read Entire Article