கோவை காளப்பட்டியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெருமுனைப் பிரச்சார கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தெரு முனை பிரச்சார கூட்டங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும் பொழுது ஒரு கூட்டணி கட்சியினர் இடையே இணைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் ,
தி.மு.க வின் குறைகளை மக்களிடம் சொல்வதற்காகவும் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

கூட்டணி இட பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தேசிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றும் இதற்காக பியூஸ்கோயல் தமிழகம் வரவிருப்பதாகவும் அவர்கள் இதுகுறித்து சரியான முடிவெடுப்பார்கள் என்வும் தெரிவித்தார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கானல் போர் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் வருகிறார்கள், செல்கிறார்கள் ஆனால் எந்த முடிவும் எடுத்தபாடில்லை. ஆனால் நாங்கள் நேர்கோட்டில் பயணித்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

தேமுதிக வருகையால் சீட் அரசியல் சூடுபிடிப்பு

கூட்டணியில் ஒற்றுமையில்லை என திருமாளவளவன் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு சீட் குறைக்க போகிறார்கள். ஆறு சீட்டில் என இருந்த நிலையில் ஒரு சீட் குறைத்து ஐந்து சீட் ஆக்கப் போகிறார்கள். இதனால் வேறு வழியின்றி அவரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற போகிறார் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் தேமுதிக வந்ததால் தான் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தர்மசங்கடம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

விஜயை பொறுத்த வரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வர வேண்டும் என முடிவு செய்வார்கள். தே.ஜ.கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர்கள். 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வது உறுதி என அண்ணாமலை தெரிவித்தார்.