திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் செல்போன் வீடியோ !! வில்லன் யார் தெரியுமா ?

1 month ago 6
ARTICLE AD

திருமண மண்டபத்தில் அதிர்ச்சி !! கழிவறையில் செல்போன் வீடியோ !! வில்லன் யார் தெரியுமா ?

சென்னை OMR செம்மஞ்சேரி பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் கடந்த 14 ம் தேதி அன்று சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இவர் திருமணத்திற்கு தயாராவதற்காக திருமண மண்டபத்தில் உள்ள கழிவறையில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பது தெரியவரவே, அப்பெண் சத்தம் போட்டதும் அருகே இருந்த நபர்கள் அந்த நபரை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம்(IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வேளச்சேரி பகுதியை சேர்ந்த பிரபு ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரபு, திருமணத்திற்கு அலங்காரம் செய்ய வந்த பெண்ணின் கணவர் என்பதும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது கடந்த இரண்டு நாட்களாக திருமண மண்டப கழிவறையில் பலமுறை இதே போல் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட பிரபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது. சுமார் ரூ.10,000 மதிப்புள்ள 360 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் வடக்கு கடற்கரை, இராஜாஜி சாலை, பர்மா பஜார் பகுதியில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி பையுடன் நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து சோதனை செய்த போது, அவர்கள் சட்ட விரோத விற்பனைக்காக வெளிநாட்டு சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபாகரன், ( வயது 32 ) மற்றும் பிரகாஷ் ( வயது 30 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.10,800 மதிப்புள்ள ESSE Special Gold , ESSE Light மற்றும் Win ஆகிய 360 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article