தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரைப்பட விநியோகம், திரைப்பட நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மிகவும் முக்கியமானவராக அறியப்படும் திரையுலகில் நடக்கும் விவகாரங்கள் குறித்து நேர்காணல் அளித்து வருகிறார்.

திருப்பூர் சுப்பிரமணியம் குற்றச்சாட்டு:

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அறிமுக இயக்குனர் ஒருவர் ரூபாய் 10 லட்சம் வாங்கிக் கொண்டு முதல் படம் செய்தார். அடுத்த படத்திற்கும் அவர் ரூபாய் 20 லட்சம் வாங்கிக் கொண்டு படம் இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் அவரிடம் ஒப்பந்தமிட்டுக் கொண்டார். அந்த படம் வெற்றி பெற்றது. இரண்டாவது படம் பிரபல நடிகரை வைத்து தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.

அதற்கு அந்த இயக்குனர் சிறிய நடிகர் என்று பெரிய நடிகரை வைத்து தயாரிக்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது, தயாரிப்பாளர் அவரிடம் எவ்வளவு ஊதியம் வேண்டும்? என்று கேட்டபோது அவர் ரூபாய் 1 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர், ரூபாய் 75 லட்சத்திற்கு சம்பளம் பேசப்பட்டது. படம் ஏறத்தாழ 70 சதவீதம் படம் முடிந்தும் திருப்தி இல்லை என்றபோதும் படம் திருப்தி இல்லாததால் 4 வருடங்களாக எடுத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

யார் அந்த இயக்குனர்? யார் அந்த தயாரிப்பாளர்?

As per Valai Pechu 👀 🚨 Producer #FiveStarKathiresan reportedly revealed that director #InnasiPandiyan, who made his debut with #Diary, earned ₹10 lakh for his first film and fixed ₹20 lakh for his second. But just 10 days into shooting, he allegedly demanded ₹1 crore after signing a big hero! He is now directing #Bullet, starring #RaghavaLawrence and his brother #Elviin. 🎬

— CineBuzzMedia (@CineBuzzMedia) October 12, 2026

திருப்பூர் சுப்பிரமணியம் கூறும் அந்த இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் பல இயக்குனரின் பெயர்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், திரைப்படம் குறித்த தகவல்களை கூறும் யூ டியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ள தகவலில் அந்த தயாரிப்பாளர் பொல்லாதவன், கோப்ரா ஆகிய படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் என்றும், அந்த இயக்குனர் இன்னாசி பாண்டியன் என்றும் கூறியுள்ளனர்.

இவர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான டைரி படத்தை இயக்கியவர். த்ரில்லர் படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். தற்போது இன்னாசி பாண்டியன் புல்லட் படத்தை ராகவா லாரன்ஸை வைத்து இயக்கி வருகிறார். இந்த படம் நீண்ட நாட்களாகவே கிடப்பில் உள்ளது. இந்த படத்தையும் பைவ் ஸ்டார் கதிரேசனே தயாரிக்கிறார்.

ரசிகர்கள் கணிப்பு:

திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தது இவர்களையே என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ரசிகர்கள் பலரும் மற்ற இயக்குனர்கள் பலரையும், தயாரிப்பாளர்கள் சிலரையும் கணித்து கூறி வருகின்றனர்.