திருநெல்வேலி அருகே பயங்கரம்!..2 மகன்களுடன் சென்ற தந்தை வெட்டிக்கொலை. 5 வயது மகன் பலி!..

3 months ago 8
ARTICLE AD

திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனத்தில் 2 மகன்களுடன் சென்ற தந்தையை காரில் வந்த கும்பல் விபத்தை ஏற்படுத்தி ஒரு மகனைக் கொன்றுவிட்டு, தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னராஜ்(12), ஜெயராஜ்(5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி வந்து காளிமுத்து வெட்டிக் கொன்றுவிட்டு, அவருடைய தலையை கல்லிடைக்குறிச்சி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வைத்துவிட்டு, காரை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

கார் மோதிய விபத்தில், காளிமுத்துவின் மகன் ஜெயராஜ்(5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூத்த மகன் சின்னதுரை பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, காயமடைந்த சின்னதுரையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, நெல்லை மாவட்ட எஸ்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து(40) என்பவர் தனது மகன்கள் இருவருடன் வல்லத்து நம்பிகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, காரில் வந்த நபர்கள், அவரை வழிமறித்து தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. காளிமுத்துவின் இளையமகன் ஜெயராஜும் உயிரிழந்தார். அவருடைய உடலில் வெளிப்படையான காயம் எதுவுமில்லை.

மூத்த மகன் சின்னதுரைக்கு (12) எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த கொலையை, காளிமுத்துவின் ஊரைச் சார்ந்தவர்கள் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article