திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - முதல் பரிசை தட்டி சென்றது யார்..?

1 year ago 7
ARTICLE AD

திண்டுக்கல்லில் முதல்முறையாக திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகி போட்டியில் தேனியைச் சேர்ந்த ஹேமா  திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார்.

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில். ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

Omni Bus Ticket: பயணிகள் ஷாக்..! தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு, இதுதான் காரணமாம்..!

அந்த வகையில் திருநங்கைகள் தங்களுக்கென்று தனித்திறன்களை காட்டுவதுமட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் இப்போது பணியில் சேர்வதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு, குறு தொழில்கள் செய்வது என ஆண், பெண் இருபாலருக்கு அப்பாற்பட்டு தங்களால் அனைத்தும் சாத்தியம் என திரு நங்கைகள் தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர்.

Rasi Palan Today Sept 02: துலாம் வாக்குவாதம் வேண்டாம், விருச்சிகத்துக்கு எடுத்த காரியம் வெற்றிதான்- உங்கள் ராசிக்கான பலன்

அப்படி திண்டுக்கல் தனியார் ஹோட்டலில் கோல்டன் லோட்டஸ் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், மதுரை, கரூர், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் கலந்து கொண்டனர். நடையழகு, உடை அழகு, முக பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Paris Paralympics: தமிழகமே உற்சாகம்..! காஞ்சிபுரத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி - பாராலிம்பிக்கில் ஃபைனலுக்கு தகுதி

Nalla Neram Today Sept 02: பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் எப்போது?

அதில்   தேனியை சேர்ந்த ஹேமா முதல் பரிசு பெற்று மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டம் பெற்றார். இரண்டாம் இடத்தை தேனியைச் சேர்ந்த சுருதி மூன்றாம் இடத்தை தேனியைை சேர்ந்த தீக்ஷனா ஆகியோர் இவர்களுக்கு கோப்பைகள் மற்றும் மடல்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தலையில் கிரீடம் அனிவிக்கப்பட்டது. திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கையர் மற்றும் பலர் கலந்து கொண்டு போட்டிகளை  கண்டு கலித்தனர். மேலும் போட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Read Entire Article