<p>திருத்தணி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. திருத்தணி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 5 பேர் பலியாகினர்.</p>
<p>கே. ஜி. கண்டிகை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p>