திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் 2.91 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கும் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, பொருட்களை செலுத்துவார்கள். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் பொருட்கள் மாதம் தோறும் எண்ணப்படும்.

கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. கோவில் அரங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் உழவாரப்பணி குழுவினர், மற்றும் கோவில் பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 2 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 513 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 640 கிராம் தங்கமும், 12228 கிராம் வெள்ளியும், 1261 வெளிநாட்டு கரன்சியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கோயில்கள்

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோயில்களில், ரூ.233.50 கோடியுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதலிடம் பிடித்துள்ளது.

1. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் - ₹233.50 கோடி

2. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் - ₹139.06 கோடி

3. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் - ₹131.38 ₹131. கோடி

4. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் - ₹111.09 கோடி

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் - ₹74.98 கோடி

6. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் - ₹73.72 கோடி

7. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் - ₹64.33 கோடி

8. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் - ₹50.57 கோடி

9. மதுரை கள்ளழகர் கோயில் - ₹34.20 கோடி

10. ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் - ₹29.16