திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு

1 week ago 2
ARTICLE AD

திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவறான சிகிச்சையால் பலி?

​திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி, தவறான மருத்துவம் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அமைச்சர்கள்

சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் ரமேஷ், சம்பத் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (DMER) உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

​அந்த உத்தரவின்படி, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஒரு உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ​இக்குழு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர்  பாஸ்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

​குழுவின் உறுப்பினர்கள் யார் யார்?

​டாக்டர் M. பாரதி மோகன் (பேராசிரியர், காது மூக்கு தொண்டை பிரிவு - MMC & RGGGH)

​டாக்டர் P. சண்முகசுந்தரம் (பேராசிரியர், மயக்கவியல் பிரிவு - MMC & RGGGH)

​டாக்டர் N. ஜெயபிரகாஷ் (பேராசிரியர், பொது மருத்துவப் பிரிவு - MMC & RGGGH)

நேரில் விசாரணை

​இந்த உயர்மட்ட விசாரணைக் குழுவினர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஏற்பட்ட மருத்துவ பாதிப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். விசாரணை முடிவடைந்தவுடன் இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாம்: திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!

Read Entire Article