தஞ்சாவூர்: தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரமணி சுப்பிரமணியன் வரவேற்றார். தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மத்திய மாவட்ட திமுக அவைத்தலைவர் இறைவன், தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு

கூட்டத்தில் மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், மண்டல பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

மேலும் தஞ்சை செய்திகளை வாசிக்க... உனக்காச்சு... எனக்காச்சு...திருடனுடன் மல்லுக்கட்டு - நடந்தது என்ன?

கூட்டத்தில், புதிய பெண் உறுப்பினர்கள் 50 ஆயிரம் பேரை மாவட்டம் தோறும் ஒரு மாதத்திற்குள் சேர்க்க வேண்டும். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மகளிர் அணியினருக்கும் பாராட்டுக்கள் தெரிவிப்பது கழக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, பவள விழாவையொட்டி மகளிர் அணியினர் அனைவரது வீட்டிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி, மகளிர் மாநகர அமைப்பாளர் ரம்யா சரவணன், மாநகரத் தொண்டர் அணி அமைப்பாளர் தமிழரசி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் கமலா ரவி நன்றி கூறினார்.