திமுக கூட்டணியை விட்டு யாரும் விலக மாட்டார்கள்: அமைச்சர் ஐ. பெரியசாமி திட்டவட்டம்

6 months ago 6
ARTICLE AD

திமுக கூட்டணியில் இருந்து கட்சி விலகும் என்பது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்ணு தெரிந்து கொண்டே தண்ணியில்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணி இருந்தால் குதிக்கலாம் தண்ணி இல்லாமல் எப்படி குதிக்க முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல், ஆத்தூர் தாலுகாவில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின் அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,

தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்த கேள்விக்கு, திட்டங்கள் அத்தனையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்து வருகிறார்.

இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை.எந்த திட்டங்கள் எனக் கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு,அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்ணு தெரிந்து கொண்டே தண்ணியில்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணி இருந்தால் குதிக்கலாம் தண்ணி இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.

இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாகதலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத் துறைகளும் உயர்ந்துள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100% வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வந்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்.கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம் ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு அரசு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர். உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக. யார் வேண்டுமானாலும் கேட்கலாம். முதலமைச்சர் அனைத்தையும் பரிசீலனை செய்வார். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு குறித்த கேள்விக்கு

ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த ஆறுமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். ஏழாவது முறையாகவும் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக வர உள்ளார். இதுவரை ஆட்சியில் யாரும் பங்கு கேட்டது இல்லை. எந்த சூழ்நிலை இல்லை. தற்போது, சூழ்நிலை நன்றாக உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

வீடியோ வரக்கூடாது ரைடு வரக்கூடாது இஃன்கம் டேக்ஸ் வரக்கூடாது. சூதானமாக இருக்க வேண்டும்.கூட்டணிகள் அதிகப்படியான சீட்டுகள் கேட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார். நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று பரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது இரண்டு அல்லது மூன்று இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் நம்மை விட்டு போகாது எனத் தெரிவித்தார்.

Read Entire Article