திமுக காங்கிரஸை ஏமாற்ற எவ்வளவு நேரம்? - எம்.சி. சம்பத் ஏன் அப்படி சொன்னார்?

2 months ago 6
ARTICLE AD

உலகத்தையே ஏமாற்றிய திமுக ஆட்சி காங்கிரஸ் கட்சியை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் கானல் நீர் கனவில் உள்ளார்

100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, அமமுக,பாமக, தமாக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கூறுகையில், “ மு.க.ஸ்டாலின் 5 ஆயிரம் மகளிருக்கு அளித்து ரூ.7000 கோடி கஜானாவை காலி செய்து உள்ளார். முதல்வர் கானல் நீர் கனவில் உள்ளார்.பொதுமக்களிடையே திமுகவுக்கு வெறுப்பு அலை உள்ளது. தனக்கு தானே சர்டிபிகேட் கொடுத்து கொள்கின்றார். தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசி அவர் Blue print முதல்வராக உள்ளார்” என்றார்.

காங்கிரஸை ஏமாற்ற தெரியாதா?

தேசிய ஜனநாயக கூட்டணி தேனும் பாலும் கூட்டணி போன்றது, திமுக கூட்டணி எண்ணெயும் தண்ணீரும்  கலந்த கூட்டணி என்று விமர்சித்த அவர், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் கூறி இருந்த நிலையில் உலகையே ஏமாற்ற தெரிந்த திமுகவிற்கு காங்கிரசை ஏமாற்ற தெரியாதா? என்று சூசகமாக தெரிவித்தார்.

போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ்

கடலூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் யாரும் கலந்து கொள்ளாமல் ரயில் மறியல் போராட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சுமூகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. இந்த கூட்டணி பிரியவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணி வரும் நிலையில், அதை உண்மையாக்கும் விதமாக நடந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article