திமுக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

2 months ago 8
ARTICLE AD

திருப்பத்தூர்: தமிழ்நாடு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்ற மாநிலமாக மாறிக் கொண்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பழங்குடியினர் மக்களின் தாமரை எழுச்சி மாநில மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாட்டில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாரம்பரிய விழாக்கள், தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. மாநாட்டு வளாகம் முழுவதும் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் களைகட்டின. மேலும், இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம், பெண்களுக்கு எதிரான ராஜ்ஜியம். தமிழ்நாடு ஒருகாலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து, பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்ற மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது,” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர், “திமுக மேடையில் அப்பா, அண்ணன், மகன், அக்காள் என குடும்ப அரசியல் நடைபெறுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் கட்சி பிரமுகர்கள், உழைப்பாளிகள், தொண்டர்கள் தான் மேடையில் இடம் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

பின்பு இந்த மாநாட்டில் ஏராளமான பழங்குடியினர்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

Read Entire Article