திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கள் கிழமை (10.03.2025) அன்று நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தப்படவுள்ளது. (Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)-MAR-2025) திட்டத்தின் கீழ் இந்த முகாம் திண்டுக்கல், நத்தம் சாலை, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 (திங்கட்கிழமை) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,050 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

இதையும் படிங்க: IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?

எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இண்டான்ஷிப் திட்டத்தில் வயது 21 முதல் 24 வரை உள்ள 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ., டிப்ளமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 (திங்கட்கிழமை) நாளை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும், www.pminternship.mca.gov.in என்ற இணைதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451-2970049 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 2024 2021 மத்திய பட்ஜெட்டில் இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் 2025 ஆம் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் மாதாந்திர உதவியும் 6 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் 8 லட்சத்திற்கும் அதிகமாகாமல் இருக்கும் இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.