திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை காலத்தை போன்று வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வீடுகளிலேயே பொதுமக்கள் முடங்கக்கூடிய சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், திண்டுக்கல் , தேனி மாவட்டதில் நேற்று முன்தினம் மதியம் வரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் மதியம் சுமார் ஒரு மணி நேரம் திண்டுக்கல் நத்தம் அருகே குறிப்பாக பழனி, கொடைக்கானல் நகரில் கனமழை பெய்தது. பழனி ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி , கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்த்து. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சூறாவளி காற்றுடன் வீசிய பலத்த மழை காரணமாக பேருந்து நிலையம் சாலை , ரயில் நிலைய சாலை , ஆங்காங்கே தேங்கிய மழை நீர் செல்ல வழியில்லாததால் , சாலையில் சாக்கடை நீருடன் தேங்கிய மழை நீரில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

இதேபோல் திண்டுக்கல் நகர் மக்களுக்கு வரப் பிரசாதமாக இந்த மழை அமைந்தது. இதேபோல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பாலகிருஷ்ணாபுரம், நாகல் நகர், பேகம்பூர், தோமையார்புரம், செட்டிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, கல்லிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது.

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?

இதேபோல தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்தது. கேரள எல்லை நகர் பகுதிகளான கம்பம், கூடலூர், போடி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன் பட்டி, ஆணைமலையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 3 மணிக்கு சாரல் மழையாக துவங்கிய நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு கனமழையாக மாறியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் திடீரென பெய்த கன மழையால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல, போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.