தாய்மையைவிட சக்தி உண்டா என்பதற்கு குட்டியை பாதுகாக்க புலியுடன் சண்டைபோட்ட கரடியின் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது.

இந்திய வன சேவை(IFS) அதிகாரி சுசந்தா நந்தா, சமூக ஊடகங்களில், வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாககருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவார். இவர் பதிவிடும் காட்சிகளால், காடுகளில்சென்று பார்க்க முடியாத காட்சிகளை, மக்கள் அதை பார்த்து ஆச்சர்யமும் மகிழ்ச்சியையும்அடைவர்.

புலியுடன் சண்டையிட்ட கரடி:

இந்நிலையில் இவர், பதிவிட்ட வீடியோக்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தவீடியோவில், குட்டியுடன் இருக்கும் கரடியானது , புலியுடன் சண்டை போடும் காட்சியை பார்க்கமுடிகிறது.
தனது குட்டியைபாதுகாப்பதற்காக, புலியுடன் சண்டை போடுவதை, அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இறுதியில்,அந்த புலியானது, கரடிகளைவிட்டே செல்வதையும் பார்க்க முடிகிறது.

“I can imagine no heroism greater than motherhood.” pic.twitter.com/tlrZcrKmMi

— Susanta Nanda (@susantananda3) September 30, 2024

எந்த ஒரு உயிரினங்களிலும்தாய்மை உணர்வானதானது உன்னதமானதாகவே பார்க்க முடிகிறது. அந்த வகையில், தனது குட்டியைபாதுகாக்க , தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் இந்த கரடியின் போர்க்குணத்தை உதாரணமாக சொல்லலாம். இந்த காட்சியைபார்த்த பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து தாய் பாசத்தையும் புகழ்ந்து வருகின்றனர்.