கவலைக்கிடமாக போகும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருபக்கம் சின்ன பட்ஜெட் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெறுகின்றன. இன்னொரு பக்கம் அஜித் , விஜய் , சூர்யா , ரஜினி , கமல் , விக்ரம் என பெரிய ஸ்டார்களின் படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன. அண்மையில் வெளியான தக் லைஃப் உட்பட இந்த ஆண்டு இதுவரை வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஒருபக்கம் பான் இந்திய படங்கள் என பிரம்மாண்ட பட்ஜெட் போட்டு எடுக்கப்படும் படங்கள் வசூலை மட்டுமே மையமாக வைத்து உருவாகின்றன. இன்னொரு பக்கம் நல்ல கதைகளை மக்களுக்கு சொல்ல நினைக்கும் இயக்குநர்களுக்கு சினிமாவில் அதிருபதியே அதிகம் மிஞ்சியிருக்கிறது.

சினிமாவை விட்டு விலகுவது குறித்து மிஸ்கின்

சினிமாவை விட்டு கூடிய விரைவில் விலக இருப்பதாக அண்மையில் இயக்குநர் மிஸ்கின் தெரிவித்திருந்தார். " சினிமாவை விருப்பப்பட்ட ஒரு வேலையாக செய்த காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இன்றைய சூழலில் நிறைய போட்டி இருக்கிறது. அதே நேரம் வனிக ரீதியான அழுத்தமும் அதிகம் இருக்கிறது. இதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் சினிமாவை விட்டு விலகுவதாக இருக்கிறேன்" என மிஸ்கின் சமீபத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கியவர் மிஸ்கின். இவர் இயக்கிய சித்திரம் பேசுதடி , அஞ்சாதே , யுத்தம் செய் , போன்ற படங்கள் வெகுஜன பரப்பில் புதிய விதமான கதைசொல்லலை கொண்டு வந்தன. மிஸ்கின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இப்படியான மிஸ்கின் சோர்வடைந்து சினிமாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதே போல் எத்தனையோ இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முழுக்க முழுக்க வனிக மையமாகிப் போன சினிமாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தற்போதை நிலைப் பற்றி பரவலாக விவாதம் தொடங்கியுள்ளது.

மிஸ்கின் இயக்கியுள்ள ட்ரெயின்

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கி இசையமைத்துள்ள படம் ட்ரெயின். விஜய் சேதுபதி ,நாசர், ஸ்ருதி ஹாசன், நரேன், ஷாஜி சென் , செல்வா ,கே.எஸ்.ரவிக்குமார் ,சம்பத் ராஜ் ,கலையரசன், யுகி சேது, இரா.தயானந்த் ,அஜய் ரத்னம், பப்லூ, பிரிதிவீராஜ் வின்சென்ட் அசோகன், கணேஷ் வெங்கட்ராமன் ,ப்ரீத்தி கரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ட்ரெயின் தான் மிஸ்கினின் கடைசி படமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது