அதிமுகவின் 3 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் திடீர் திருப்பமாக தேர்தலில் வெற்றி பெற்று 3 பேர் 21 நாட்களில் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாரும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்யபாமா ஆகிய 3 பேரும் திடீரென கட்சி மாறியுள்ளனர். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தூயசக்தி அல்ல துயரசக்தி

இதற்கு எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம் என குறிப்பிட்டு இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களை வாக்களித்தார்களா? என கேள்வியெழுப்பினார். மேலும் தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், துயரசக்தி என அம்பலப்பட்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் விசிலடித்து ரசிக்கும் நிலையில் அவர்களின் போலி பாஜக எதிர்ப்பு பல்லிளிக்கிறது” என சகட்டுமேனிக்கு பதிலடி கொடுத்து கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

நாடகம் ஆடுவது யார்? - மக்களுக்கு தெரியும்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் என்ன நடந்தது?உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “கனெக்டிங் கால்” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக முடிவு எடுத்தது.

மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.… https://t.co/ASHYdXExUr

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 25, 2026

அதனால் தான் நாங்கள் தவெக அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, விசிக இந்த அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்” என மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.