நாளை விஜய்யின் முதல் மாநாடு:

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டியில், வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவெகவின் முதல் மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்பாடுகள்:

மாநாட்டிற்கு அதிகளவு பொதுமக்கள் வரக்கூடாது என்பதற்காக, நுழைவு வாயில் வழியாக பொதுமக்கள் வருவதற்கான ஏற்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவது சிரமமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே உணவு கொடுக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வருபவர்களுக்கு மிக அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் ஜூஸ், ஸ்னாக்ஸ் ஆகியவற்றை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை, செய்யப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பணியமத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விக்கிரவாண்டி வானிலை

நாளைய முதல் மாநாடானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதால், அங்கு மழை வருமா என்பது குறித்தான சந்தேகமும், த வெ க வினரிடையே அச்சமும் நிலவி வருகிறது, இதற்காக , அவரது ரசிகர்கள் மழை வரக்கூடாது என பூஜைகூட செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் , நாளைய வானிலை குறித்து , சுயாதீன வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் தெரிவிக்கையில் “ விக்கிரவாண்டியில் , நாளை பகல் பொழுதில் தெளிவான வானமும், வெப்பமும் இருக்கும். காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த நிலை இருக்கும் எனவும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் , நாளை விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டிற்கு மழையினால் தடங்கல் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிக்கவும்.

Also Rain: பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?

pic.twitter.com/uHzHXP5YaT

— TVK Vijay (@tvkvijayhq) October 25, 2024