தமிழக சட்டமன்ற கூட்டம்- இரங்கல்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது. இதனையடுத்து காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி. இராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க. ஆறுமுகம், பெ. கண்ணன் அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு இரங்கள் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது இரங்கலை தெரிவிக்கும் வகையில் இரண்டு மணித்துளி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்தாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, , சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று தங்களது அஞ்சலி செலுத்தினார்கள்.

மேகதாது அணை- முதலமைச்சர் தீர்மானம்

இதனையடுத்து சட்டமன்றத்தில் காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட திட்டமிடும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மமக, மஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில்,

மேகதாது அணை கட்ட விடாமல் தடுத்ததில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பங்கு முக்கியமானது. பல்வேறு அரசியல் போராட்டம் நடத்தி தான் காவிரி மீதான உரிமையை பெற்றுள்ளோம். இன்று கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. எங்க கூட்டணியில் இருந்த கட்சி தான் கர்நாடகவில் ஆட்சியில் இருந்தாலும் அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மேகதாது விஷயத்தில் கடுமையாக எதிர்த்தார். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மேகதாதுவிற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை திமுக சார்பாக வரவேற்கிறோம்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு- தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

அதே நேரம் கர்நாடக அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் மாதம் மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஜூலை மாதம் ஜல் சக்தி அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது. அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அமைச்சரிடம் மேகதாதுவிற்கு எதிராக தீர்மானத்தை கொடுத்தோம். அடுத்தாக மேகதாது அணை கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்தாக பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக திமுக ஆட்சி காலத்தில் மேகதாது விவகாரத்தில் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

உதயநிதிக்கு உடனே ஓகே சொன்ன விஜய்

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று மேகதாதுவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த முக்கிய தீர்மானத்தை கடிதம் மூலாமக அனுப்பிவைப்பதற்கு பதிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற எம்பிக்களும் இணைந்து ஒற்றுமையாக சென்று தீர்மானத்தை மத்திய அரசிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு திமுகவும் தயாராக உள்ளது. எனவே அரசியல் வேறுபாடு களைந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக உதயநிதி பேசும்போது, ’காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தோடு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தனி நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தீர்மானத்தில் இணைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.