<p>AK 64 படத்தை அஜித் குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்க இருப்பதாக வலைப்பேச்சு யூடியுப் சேனல் தகவல் தெரிவித்துள்ளது. </p>
<p>குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக அஜித் குமார் ரூ 185 கோடி சம்பளமாக கேட்ட நிலையில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அஜித் கேட்ட சமபளத்தை தர எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வராத காரணத்தினால் அஜித்தே இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை AK64 படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக வலைப்பேச்சு யூடியுப் சேனல் தகவல் தெரிவித்துள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/honda-activa-ev-full-range-in-full-charge-264787" width="631" height="381" scrolling="no"></iframe></p>