‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ முதல்வர் ஸ்டாலின் உறுதியேற்றது ஏன்..? காரணம் இதுதான்..?

2 months ago 5
ARTICLE AD

ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கினார்.  திமுக உறுப்பினர் சேர்க்கையை விட  பண்பாடு, பொருளாதாரம் மற்றும் அரசியல் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கும் இயக்கமாக ஓரணியில் தமிழ்நாடு மாறிப்போனது. இது திமுகவிற்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தந்துள்ளது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கு திமுக கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளே ஆச்சரியப்பட்டுப்போயின.

உரிமைகளுக்கான போராட்டம் இயக்கமாக மாறிய ஓரணியில் தமிழ்நாடு

கீழடி, புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, கல்வி நிதி மறுப்பு, நீட் தேர்வுகள், கூட்டாட்சி சிதைப்பு, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் தொகுதி மறுவரையறை அச்சுறுத்தல் என தொடர் தாக்குதல்களை தமிழ்நாடு எதிர்த்து நின்று போராடுவதற்கு இந்த இயக்கம் திமுகவிற்கு பக்கபலமாகியிருக்கிறது.

அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில்கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையை ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுக தீவிரப்படுத்தியது. விளைவு, முதல்கட்ட முன்னெடுப்பிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளதாகவும், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்பதை இந்த இயக்கம் மூலம் மக்கள் நிரூபித்துள்ளதாகவும் கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டேன் – சூளுரைத்த முதல்வர்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக ஒன்றிணைந்த மக்களை தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்கும் வகையில் உறுதி மொழி எடுக்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினே அந்த தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து சூளுரைத்ததோடு, தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் இந்த வாசத்தை பதித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

அதே நேரத்தில், ஓரணியில் தமிழ்நாடு மக்கள் இயக்கத்தில் இணைந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாக்கு சாவடி அளவிலும், மாவட்ட அலவிலும் உறுதிமொழியேற்பு கூட்டங்களில் ப்லங்கேற்று, ‘தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டேன்’ என்று உறுதி மொழி ஏற்றியிருக்கிறார்கள்.

செப்டெம்பர் 17 கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் ‘தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்’ என்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் உரிமைகளை பெறுவது

இதன் மூலம் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை எப்படி வஞ்சிக்கிறது என்பதையும் நிதி தராமல் தமிழ்நாட்டை பாஜக புறக்கணிப்பதையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து, அந்த கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோலுரிப்பதும் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணியை உருவாக்குவது, பிளவுப்பட்டுப்போன கூட்டணியை திருப்பி கட்டமைப்பதிலும் மும்முரம் காட்டி வரும் நிலையில், கூட்டணியை கட்டுப்க்கோப்பாக வைத்திருக்கும் திமுக, மக்களிடம் செல் என்ற அண்னாவின் வழியில் இந்த இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article