<p>தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம். அதன்படி, தலித் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேபோல, ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆவடி நாசரும் செந்தில் பாலாஜியும் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். அதேபோல, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. </p>
<p> </p>