தமிழகத்தில் மௌனப் புரட்சி: திமுக அரசை வீழ்த்தி அதிமுக வெற்றி பெறும் - சி.வி.சண்முகம் பேட்டி

1 hour ago 1
ARTICLE AD

விழுப்புரம்: மயிலம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தனது சொந்த ஊரான மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவ்வையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்கு பதிவு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தனது சொந்த ஊரான மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவ்வையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 208-ல், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"வாக்குப்பதிவு நாளான இன்று வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் எழுச்சியோடு இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், மாற்றம் வேண்டும் என்பது மக்கள் முகத்தில் தெரிகிறது.

கடந்த 5 ஆண்டுகால திராவிட மக்கள் விரோத அரசு, மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, மக்கள் மீது கவனம் செலுத்தக் கூடிய அம்மா ஆட்சியை, எம்.ஜி.ஆர். பாணியில் தரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுச்சியாக எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "எனது மகனை தமிழ்நாட்டுக்குத் தத்துக்கொடுத்துவிட்டேன்" என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சி.வி.சண்முகம், "பிள்ளையை வளர்க்கக் கூட துப்பில்லை" எனக் கடுமையாக விமர்சித்தார்.

Read Entire Article