தமிழகத்தில் காய்ச்சல் , இருமல் பரவல் !! வைரஸ் உருமாற்றமா ? பொது சுகாதாரத் துறை ஆய்வு

2 months ago 8
ARTICLE AD

சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு சளி , காய்ச்சல்

தமிழகத்தில் பருவ மழைக் காலம் நிறைவடைந்தாலும், குளிர் மற்றும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நோய் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

வைரஸ் உருமாற்றம்

சிலருக்கு சளி, இருமல் குணமடைந்த பின், தலைவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. முறைப்படியான சிகிச்சையில், ஒரு வாரத்தில் பாதிப்புகள் குணமடைந்தாலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில், காய்ச்சல், சளி போன்றவை தொற்றிக் கொள்வது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எந்த வகையான வைரஸ், தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வை, பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து அந்த துறை அதிகாரிகள் கூறியதாவது ;

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லை. அதேவேளையில், இன்ப்ளுயன்ஸா வைரஸ், ஆர்.எஸ்.வி., எனப்படும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

காய்ச்சல், உடல் வலியுடன், சளி, இருமல் பாதிப்பும் இருப்பதால், சுவாசப் பாதையின் மேற்பகுதியில் ஏற்படும் தொற்றாகவே, இதைக் கருத முடிகிறது. சிலரை தவிர மற்றவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் குணமடைவதால், அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் , எந்த வகையான வைரஸ் என்பதைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை, தோராயமாக சேகரித்து அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்த உள்ளோம் என இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read Entire Article