தமிழகத்தில் 5, கேரளாவில் 3... எங்கெல்லாம் மழை? எச்சரிக்கும் வானிலை மையம்

11 months ago 11
ARTICLE AD

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் மழை பெய்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், கேரளாவில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாளை கொல்லம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 24 மணிநேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோமரின் பகுதியில் நிலைகொண்டுள்ள சூறாவளி சுழற்சியின் தாக்கத்தால் வரும் நாட்களில் இடி மின்னலுடன் மழை தொடர வாய்ப்புள்ளது. ஜனவரி 16ஆம் தேதி வரை கேரளாவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பெருங்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

இன்று இரவு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

இதில் ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read Entire Article